புன்செய் புளியம்பட்டியில் விடியல் வழிகாட்டி 2020 : பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சி
புன்செய் புளியம்பட்டி 

 

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை மற்றும் ஆதித்யா கல்வி நிறுவனங்கள் சார்பில் 10,  11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

 

இதுகுறித்து விடியல் சமூகநல இயக்கம் செயலாளர் ஜெயகாந்தன் கூறியிருப்பதாவது, விடியல் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி - விடியல் வழிகாட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு ஆலோசனை நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2  ஆம் தேதி புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 

 

இந்நிகழ்ச்சிக்கு சத்தியமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் கோ. ச. செந்தில்குமார் தலைமை தாங்குகிறார் ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சித்ரா மனோகர் முன்னிலை வகிக்கிறார். விழாவில் பிரபல கல்வியாளர், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று பலதுறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.  பாரதியார் பல்கலைக்கழகத்தின் அண்ணா ஐஏஎஸ் பயிற்சி மைய இயக்குனர் டாக்டர் பத்மநாபன் தேர்வு ஆலோசனை கையேட்டினை வெளியிட்டு  சிறப்புரையாற்றுகிறார். 

 

விழாவில் பொதுத் தேர்வை சிறப்பாக எழுதுவது எப்படி?  எப்படி படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்?  10, 12ம் வகுப்பு பிறகு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?  தன்னம்பிக்கை மற்றும் உயர்கல்வி ஆலோசனைகள் குறித்து பிரபல கல்வியாளர்கள் உரையாற்றுகிறார். விழாவில் பங்கெடுக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் தேர்வு ஆலோசனை கையேடு, குறிப்பேடு, பேனா ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.  மாணவ மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் விடியல் வழிகாட்டி நிகழ்ச்சியில் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி  மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.