புன்செய் புளியம்பட்டி
புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 71 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டும் மாணவ மாணவியர்கள் - பொதுமக்கள் இடையே தேசப்பற்று - தேச ஓற்றுமை - மத நல்லிணக்கம் - சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் - புன்செய் புளியம்பட்டியில் முதல் முறையாக 2 கிலோமீட்டர் ( 2000 மீட்டர் ) நீளமுள்ள மிக நீண்ட இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பிரமாண்ட மனித சங்கிலி அமைத்தனர். புன்செய் புளியம்பட்டி டானா புதூர் நால் ரோட்டில் தொடங்கிய மனிதச்சங்கிலி கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆதிபராசக்தி கோவிலில் நிறைவடைந்தது.
இந்த மனித சங்கிலியில் விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் இயக்குனர்கள் சதீஸ்குமார், ரமேஷ்குமார், புன்செய் புளியம்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, செவ்வந்தி, பிரகாஷ், பி.கே. சண்முகம், செந்தில்குமர ராஜா, தியாகராஜன், ஸ்ரீ தேனு சில்க்ஸ் மூர்த்தி தருமன், முருகேஷ், ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர் பார்த்திபன், அம்மா மெட்ரிக் பள்ளி செயலாளர் ராணிலட்சுமி அன்பு, நிர்வாக இயக்குனர் பி.எஸ்.அன்பு, ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குனர் ஸ்ரீதர், கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவராஜ், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் முத்து, வெங்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வாசுகி, வகுத்து கவுண்டன்புதூர் இடைநிலை ஆசிரியர் அருள்முருகன், சிந்தாமணி வித்யாலயா பள்ளி நிர்வாகி லோகநாதன், சிவசக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் வேலுசாமி, புளியம்பட்டி கிளை நூலகர் ஜனார்த்தனன், கெ.ஓ.ம அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.சி மெட்ரிக் மேல்நிலைபள்ளி, மற்றும் அணைத்து பள்ளி மாணவ மாணவியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், தரணி ஹெர்பல்ஸ் சுந்தர்ராஜ், இளந்தென்றல் ஆம்புலன்ஸ் கதிர், எம்.ஆர்.எப் ஆம்புலன்ஸ் தங்கமணி, ட்ரீ டிரஸ்ட் சீனிவாசன், இளந்தென்றல் அறக்கட்டளை நவீன் மற்றும் பொதுமக்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.